மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
11-Mar-2025
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் ஜாத்திரை விழா நடந்தது. இதையொட்டி கடந்த, 23ம் தேதி கிராம தேவதை, கன்னியம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது. அடுத்த இரண்டு நாள் அலங்கரிக்கப்பட்ட கரகம் ஊர் சுற்றி வந்தது.நேற்று முன்தினம் இரவு உற்சவர் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு, படையல் போட்டு அம்மனை வழிபட்டனர்.நேற்று மாலை, பக்தர்கள் அலகு குத்தியும், கத்தி மேல் நடந்தும் சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பின் பெண்கள் விளக்கேந்தி ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர்.
11-Mar-2025