உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  திருத்தணி கோவிலில் படித்திருவிழா: ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

 திருத்தணி கோவிலில் படித்திருவிழா: ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் படித்திருவிழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலில், படித்திருவிழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி, காலை 8:15 மணிக்கு சரவண பொய்கை அருகே உள்ள மலையடிவாரத்தில், கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் ஆகியோர், பஜனை குழுவினரை வரவேற்று, முதல் படியில் பூஜை செய்து படித்திருவிழாவை துவக்கி வைத்தனர். இதில், பெங்களூரு, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பஜனை கோஷ்டியினர், ஒவ்வொரு படியிலும் பக்தி பாடல்கள் பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை வழிபட்டனர். மேலும், திரளான பெண் பக்தர்கள் படித்திருவிழாவையொட்டி, ஒவ்வொரு படியிலும் மஞ்சள், குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றினர். தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, உற்சவர் முருகன், வள்ளி - தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ