வழிமறித்து தாக்கிய மூவருக்கு வலை
ஆர்.கே.பேட்டை:வேலைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த, 44 வயது நபரை, வழிமறித்து தாக்கிய மூவரை, போலீசார் தேடி வருகின்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த சகஸ்ரபத்மாபுரத்தை சேர்ந்தவர் ரங்கநாதன், 44. இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த மேகநாதன், 50, என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 27ம் தேதி, ரங்கநாதன் வேலைக்கு சென்று, இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சகஸ்ரபத்மாபுரம் அருகே வந்த போது, மேகநாதன், அவரது மகன் சாமு, 24, மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 25, ஆகியோர், ரங்கநாதனை வழிமறித்து, இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் தேடி வருகின்றனர்.