மேலும் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட எட்டு பேருக்கு 'காப்பு'
02-Feb-2026
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளர்களிடம், வழிப்பறியில் ஈடுபட்டதாக, மூவரை போலீசார் கைது செய்தனர். பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் லலித்நாராயணன் தாகூர், 55, சஞ்சித்மண்டல், 30. மாதர்பாக்கம் அருகே பெரியபுலியூர் கிராமத்தில் வசித்தபடி அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, இருவரும் பைக்கில் மாதர்பாக்கம் சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பூவலம்பேடு கிராமம்அருகே எதிரே, பைக்கில் வந்த மூன்று பேர், இருவரை வழி மறித்து, மொபைல் போன் மற்றும் 5,000 ரூபாயை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், வழிபறியில் ஈடுபட்ட, அமரம்பேடு கிராமத்தை சேர்ந்த தினகரன், 25, சிறுவாடா கிராமத்தை சேர்ந்த கவுதம், 25, தாணிப்பூண்டி கிராமத்தை சேர்ந்த விஷ்வா, 20 ஆகிய மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
02-Feb-2026