உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதை மாத்திரைகள் கடத்திய மூவர் கைது

போதை மாத்திரைகள் கடத்திய மூவர் கைது

கும்மிடிப்பூண்டி:ஆந்திராவில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த மூவரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், நேற்று மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கு, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில், 4,000 ரூபாய் மதிப்புள்ள, 800 போதை மாத்திரைகள் இருந்தன. தொடர் விசாரணையி ல், சென்னை திருவேற்காடைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 24, சந்துரு, 24, மற்றும் குன்றத்துாரைச் சேர்ந்த பிரேம்குமார், 26, என்பதும், ஆந்திராவில் இருந்து போதை மாத்திரைகளை சென்னைக்கு கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு போலீசார் மூவரையும் கைது செய்து, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை