உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / களை எடுக்கும் இயந்திரம் திருடிய மூவர் கைது

களை எடுக்கும் இயந்திரம் திருடிய மூவர் கைது

திருத்தணி:ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசேகர், 25. இவருக்கு சொந்தமான நிலம், திருத்தணி ஒன்றியம், வி.கே.என்.கண்டிகை கிராமத்தில் உள்ளது.இந்த நிலத்தில் பூச்செடிகள் வைத்து பராமரித்து வருகிறார். நேற்று முன்தினம், வாசு பூந்தோட்டில் களை எடுக்கும் இயந்திரம் வாயிலாக புல்லை அறுத்துக் கொண்டிருந்தார்.பின், மதியம், இயந்திரத்தை நிலத்தில் நிறுத்திவிட்டு வாசு வீட்டிற்கு வந்துவிட்டார். அப்போது, மூன்று இளைஞர்கள் இயந்திரத்தை திருடிக் கொண்டு அங்கிருந்த தப்பிச் செல்ல முயன்றனர்.அவ்வழியாக வந்த சிலர், மூன்று பேரையும் மடக்கி பிடித்து, திருத்தணி போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில் இயந்திரத்தை திருடியவர்கள் பள்ளிப்பட்டு தாலுகா, கோடூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசங்கர், 19, மணிகண்டன், 22, மற்றும் 17 வயது சிறுவன் எனவும், இயந்திரத்தை திருடியதை ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து மூன்று பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை