உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கல்லுாரி மாணவனை தாக்கிய மூவருக்கு வலை

கல்லுாரி மாணவனை தாக்கிய மூவருக்கு வலை

திருத்தணி: கல்லுாரி மாணவன் மீது தாக்குதல் நடத்திய மூவரை போலீசார் தேடி வருகின்றனர். திருத்தணி அடுத்த வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித், 19. இவர், திருத்தணி அரசு கலை கல்லுாரியில் படித்து வருகிறார். இவருக்கும், அதே வகுப்பில் படிக்கும் பொன்னரசு, சூர்யா, கெல்வின் ஆகியோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று கல்லுாரியில் வளாகத்தில், ரஞ்சித் வந்து கொண்டிருந்த போது, மேற்கண்ட மூன்று பேர் கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த ரஞ்சித், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ரஞ்சித் கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அதேபோல, பொன்னரசு தந்தை குணசேகர் கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் ரஞ்சித் மீது வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை