உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மரத்தில் கார் மோதி மூன்று பேர் படுகாயம்

மரத்தில் கார் மோதி மூன்று பேர் படுகாயம்

திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையைச் சேர்ந்தவர் அரவிந்த், 30. இவர், நேற்று தாய் கலைவாணி, 52, மனைவி லாவண்யா, 5 வயது மகனுடன், திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை அரவிந்த் ஓட்டினார்.திருத்தணி -- நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில், வேலஞ்சேரி அருகே வளைவில் திரும்பும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் மோதி கவிழ்ந்தது. அவ்வழியாக சென்றவர்கள் மூவரையும் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், அரவிந்த் காயமின்றி உயிர் தப்பினார். மற்ற மூவரும் படுகாயமடைந்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை