மேலும் செய்திகள்
கிணற்றில் பெண் சடலம் மீட்பு
16-Sep-2025
திருத்தணி:திருத்தணி அருகே முன்பகை காரணமாக மோதிக் கொண்ட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். திருத்தணி ஒன்றியம் வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஓட்டுநர் குருபிரசாத், 28. இவருக்கும், செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ராக்கி, 25, என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குருபிரசாத், நண்பர் சீனிவாசன், 30, என்பவருடன் சேர்ந்து, ராக்கியை அடிக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த ராக்கி, குருபிரசாத்திற்கு மொபைல்போனில் தொடர்பு கொண்டு, 'உன்னிடம் பேச வேண்டும்' எனக் கூறியுள்ளார். நேற்று முன்தினம் இரவு, ராக்கி மற்றும் நண்பர்கள் மூன்று பேருடன் கே.ஜி.கண்டிகையில் தயாராக இருந்த நிலையில், அங்கு வந்த குருபிரசாத்தை சரமாரியாக தாக்கி, அவரது கார் கண்ணாடியை உடைத்தனர். பின், குருபிரசாத்தின் காரை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ராக்கி தப்பிச் சென்றார். குருபிரசாத் காவல்துறை கட்டுப்பாட்டு எண் 100க்கு தகவல் தெரிவித்தார். சென்னை- - திருப்பதி நெடுஞ்சாலை வழியாக திருவள்ளூர் நோக்கி சென்ற ராக்கியை, கனகம்மாசத்திரம் பகுதியில் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து குருபிரசாத், ராக்கி இருவரும் அளித்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், குருபிரசாத், சீனிவாசன், ராக்கி மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
16-Sep-2025