உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் கைவண்டூர் விவசாயிகள் அச்சம்

சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் கைவண்டூர் விவசாயிகள் அச்சம்

திருவள்ளூர்:திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையோரம், கைவண்டூர் அடுத்த அம்பேத்கர் நகர் அருகில் மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்களில் இருந்து அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.சமீபத்தில் பெய்த மழைநீர் மின்கம்பங்கள் நடப்பட்டுள்ள இடங்களில் தேங்கியதால், சில மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. மேலும், மின்கம்பிகளும் தாழ்வாக தொங்கி கொண்டுள்ளன.இதன் காரணமாக, சாலையோரம் உள்ள பகுதிவாசிகள், விவசாயிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும், வாகன ஓட்டிகள் ஒருவித பயத்துடனேயே இப்பகுதியை கடந்து செல்கின்றனர். மின்கம்பம் கீழே விழுந்தால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, மின்வாரிய துறையினர், சாய்ந்து கிடக்கும் மின்பங்களை சீரமைக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை