உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாய்ந்த நிலையில் மின்கம்பம் வாகன ஓட்டிகள் திக்... திக்

சாய்ந்த நிலையில் மின்கம்பம் வாகன ஓட்டிகள் திக்... திக்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியிலிருந்து மண்ணுார், நெமிலி வழியாக ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாக பாப்பரம்பாக்கம், கொப்பூர், அரண்வாயல்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் கிராமவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இச்சாலையில் பல இடங்களில் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்த நிலையிலும், கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்தும் உள்ளன. சில இடங்களில் வாகனம் மோதி மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள், நெடுஞ்சாலையோரம் அபாய நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை