உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடோனாக மாறிய சமுதாய கூடம் திருப்பாச்சூர் பகுதிமக்கள் அதிர்ச்சி

குடோனாக மாறிய சமுதாய கூடம் திருப்பாச்சூர் பகுதிமக்கள் அதிர்ச்சி

திருப்பாச்சூர், அக். 9-திருப்பாச்சூரில் உள்ள சமுதாய கூடம், குப்பை வண்டி நிறுத்தும் குடோனாக மாறியுள்ளதால், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள வாசீஸ்வரர் கோவில் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாய கூடத்தை பகுதி மக்கள், தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சமுதாய கூடம், ஊராட்சிக்கு வழங்கப்பட்ட குப்பை வண்டிகள் நிறுத்தும் கிடங்காக மாறியுள்ளது. இது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமுதாய கூடத்தை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ