உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி ரயில்வே சுரங்கப்பாதை சுவர் பெஞ்சல் புயல் மழையால் சேதம்

திருத்தணி ரயில்வே சுரங்கப்பாதை சுவர் பெஞ்சல் புயல் மழையால் சேதம்

திருத்தணி : திருத்தணி பை-பாஸ் ரவுண்டான பகுதிக்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் கொட்டி வருகிறது. அண்மையில் வந்த 'பெஞ்சல்' புயல் மற்றும் பருவ மழையால், ரயில்வே சுரங்கப்பாதையின் தடுப்பு சுவர், 5 மீட்டர் நீளத்திற்கு சேதம் அடைந்துள்ளது.மேலும், ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் வடிகால்வாயில் புதைந்ததால், மழைநீர் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் கடும் சிரமப்பட்டு சென்றனர்.இதையடுத்து நேற்று, நெடுஞ்சாலைத் துறையினர், 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக கால்வாயில் உள்ள அடைப்புகளை அகற்றினர். மேலும் சுரங்கப்பாதையின் தடுப்பு சுவர் சேதம் அடைந்ததை பார்வையிட்ட அதிகாரிகள் மழை நின்றதும் தடுப்பு சுவர் சீரமைக்கப்படும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி