உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிரம்பி வழியும் திருத்தணி சரவணபொய்கை குளம்

நிரம்பி வழியும் திருத்தணி சரவணபொய்கை குளம்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு படிகள் வழியாக செல்லும் இடத்தில் சரவணபொய்கை குளம் உள்ளது. இக்கோவிலில் சில பக்தர்கள் புனித நீராடிய பின் படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று மூலவர் முருகப்பெருமானை தரிசிப்பர்.இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை காரணமாக, இரு நாட்களுக்கு முன், 24 மணி நேரம் தொடர்ந்து திருத்தணியில் பலத்த மழை பெய்ததால், மலைக்கோவிலில் இருந்து படிகள் வழியாக மழைநீர், சரவணபொய்கை குளத்திற்கு வந்தடைந்தது.இதனால், குளம் முழுமையாக நிரம்பி, அதன் உபரிநீர், கால்வாய் வழியாக, நகராட்சி வண்ணார்குளத்திற்கு வருகிறது. அங்கிருந்து கால்வாய் வழியாக ஜோதிநகர் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு பின், தற்போது சரவணபொய்கை குளம் நிரம்பி வழிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி