உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவாலங்காடு ஒன்றிய கூட்டம்

திருவாலங்காடு ஒன்றிய கூட்டம்

திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றிய சாதாரண கூட்டம் சேர்மன் ஜீவா விஜயராகவன் தலைமையில், பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. பி.டி.ஓ., காளியம்மாள் மற்றும் துணை சேர்மன் சுஜாதா ஆகியோர் வரவேற்றனர்.கூட்டத்தில் திருவாலங்காடு, சின்னம்மாபேட்டை, மணவூர் உட்பட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் செய்ய வேண்டிய சாலை, மின்விளக்கு, மின் மோட்டார் அமைத்தல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளின் அவசர அவசியத் தேவைகளைக் கருதி மன்ற ஒப்புதல் கோரப்பட்டது.காவேரிராஜபுரம் அ.தி.மு.க., கவுன்சிலர் டில்லிபாபு பேசும்போது, 'ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்களின் குறைகளை, தேவைகளை கேட்டறிந்து மக்கள் பணியாற்ற கவுன்சிலர்களுக்கு பஞ்சாயத்து அலுவலகத்தில் தனியறை ஒதுக்க வேண்டும்' என்றார்.புகழ்பெற்ற வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் வரலாற்றை தெரிந்துகொள்ளும் வகையில், ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சேர்மன் வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ