மேலும் செய்திகள்
முதல்வர் பார்வைக்கு -2
09-Nov-2024
கவரைப்பேட்டை அடுத்த மேல்முதலம்பேடு கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதி கைலாசநாதர் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கான பாதை, பேவர் பிளாக் சாலையாக மாற்றப்பட்டது. தற்போது அந்த சாலையை மறைக்கும் அளவிற்கு புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் கோவில் வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். உடனடியாக புதர்களை அகற்ற மேல்முதலம்பேடு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் அமைந்துள்ள பகுதி, மழைக்காலங்களில் சகதியாக மாறுவதால், அப்பகுதியில் மழைநீர் தேங்காதபடி தரை அமைக்க வேண்டும். ஆர்.சக்திவேல்,கவரைப்பேட்டை.
09-Nov-2024