மேலும் செய்திகள்
கோதண்டராமர் உற்சவம் இன்று துவக்கம்
29-Mar-2025
ஆர்.கே.பேட்டை:ராம நவமி உற்சவம் இன்றும், நாளையும் பல்வேறு கோவில்களில் கொண்டாடப்பட உள்ளது. அம்மையார்குப்பம் கோதண்டராமர் பஜனை மடத்தில், நாளை துவங்கி அடுத்த ஒன்பது நாட்களுக்கு உற்சவம் நடைபெற உள்ளது.தினமும் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு தேவாரம் மற்றும் பண்டரி பஜனை நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, கோவில் வளாகத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தினமும் உபயதாரர்கள் பலரும் உற்சவத்தில் பங்கேற்க உள்ளனர்.அதே போல், ஆர்.கே.பேட்டை கோதண்டராமர் கோவிலிலும் சிறப்பு உற்சவம், திருக்கல்யாணம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற உள்ளன.
29-Mar-2025