மேலும் செய்திகள்
பெதப்பம்பட்டியில் நாளை வெறிநோய் தடுப்பூசி முகாம்
26-Sep-2024
திருத்தணி:ஆண்டுதோறும், செப்., 28ம் தேதி உலக நெறிநாய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, இன்று திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள 23 கால்நடை மருந்தகங்களில், வீட்டு செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் முகாம், காலை 8:00 - மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.இதுகுறித்து திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் கூறியதாவது:இன்று உலக வெறிநாய் தடுப்பு தினத்தை முன்னிட்டு, அனைத்து கால்நடை மருந்தகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.இந்த சிறப்பு முகாமில் வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளாக நாய், பூனை ஆகியவற்றை சிறப்பு முகாமிற்கு அழைத்து வந்து ‛ரேபிஸ்' நோய் தடுப்புக்கான தடுப்பூசி இலவசமாக போட்டுக் கொள்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.எனவே, செல்லப்பிராணிகள் வளர்க்கும் அனைவரும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளலம்.இவ்வாறு அவர் கூறினார்.
26-Sep-2024