உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கனரக லாரி மோதி விபத்து சுங்கச்சாவடி ஊழியர் காயம்

கனரக லாரி மோதி விபத்து சுங்கச்சாவடி ஊழியர் காயம்

திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதுார் பகுதியில், சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இங்கு, பட்டரைபெரும்புதுார் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன், 28, என்பவர், சங்கச்சாவடி கவுண்டர் ஒன்றில் பணம் வசூலிக்கும் பணி மேற்கொண்டு வந்தார். அப்போது, நேற்று மதியம் சென்னையிலிருந்து திருத்தணி வழியாக நாகாலாந்து நோக்கி சென்ற கனரக லாரி, ஓட்டுநரின் கவனக்குறைவால் சுங்கச்சாவடி பூத்தின் மீது மோதியது. இதில், பூத் இடிந்து இரும்பு கம்பி விழுந்ததில், அரக்கோணம் நோக்கி செல்வதற்காக நின்று கொண்டிருந்த 'இன்னோவா' கார் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில், சுங்கச்சாவடி ஊழியர் லேசான காயமடைந்தார். காரில் வந்த நபர்கள் எவ்வித காயமுமின்றி தப்பினர். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை