கொடிகள் படர்ந்த மின்மாற்றி
மீஞ்சூர் சீமாவரம் அருகே உள்ள மின்மாற்றி மற்றும் கம்பங்களை சுற்றிலும் கொடிகள் படர்ந்துள்ளன. மீஞ்சூர் அடுத்த சீமாவரம் அருகே, வெளிவட்ட சாலையை ஒட்டி பொருத்தப்பட்டுள்ள மின்மாற்றி மற்றும் கம்பங்களை சுற்றிலும் கொடிகள் படர்ந்துள்ளன. மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், மின்மாற்றியில் படர்ந்துள்ள கொடிகளால், மின்வாரிய ஊழியர்கள் அவசர பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. மேலும், மின் விபத்துக்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், மின்மாற்றியை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.