உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.3 லட்சத்துக்கு விற்கப்பட்ட 2 மாத பச்சிளம் குழந்தை மீட்பு திருநங்கையிடம் விசாரணை

ரூ.3 லட்சத்துக்கு விற்கப்பட்ட 2 மாத பச்சிளம் குழந்தை மீட்பு திருநங்கையிடம் விசாரணை

ஆர்.கே.பேட்டை: பச்சிளம் பெண் குழந்தையை, ஆந்திர மாநில தம்பதியிடம் இருந்து விலைக்கு வாங்கி வந்த திருநங்கையிடம், குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த ஜி.சி.எஸ்.கண்டிகை அருந்ததி காலனியைச் சேர்ந்தவர் மாதவா என்கிற மாயா, 30; திருநங்கையான இவர், உறவினரின் உதவியுடன், இரண்டு மாத பெண் குழந்தையை, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த ஆந்திர மாநில தம்பதியிடம் இருந்து, விலைக்கு வாங்கியுள்ளார். இதுகுறித்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரி, நேற்று மாயாவிடம் விசாரணை நடத்தினார். இதில், 3.10 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விலைக்கு வாங்கி வந்ததாக தெரியவந்துள்ளது. குழந்தையை மீட்ட அதிகாரிகள், திருவள்ளூர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை