அரசு பள்ளியில் முப்பெரும் விழா
ஊத்துக்கோட்டை:எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு அரசு தொடக்கப் பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். மாணவர் சேர்க்கை விழா, பள்ளி ஆண்டு, சணல் பை விநியோகம் என, முப்பெரும் விழா பள்ளி தலைமையாசிரியர் வெஸ்லிராபர்ட் தலைமையில் நடந்தது.சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் கல்பனா பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதை தொடர்ந்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க, ஒவ்வொரு மாணவர்கள் மற்றும் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சணல் பை ஒன்று வழங்கப்பட்டது.