மேலும் செய்திகள்
ஒரே பைக்கில் 4 பேர் பயணம் கண்டுகொள்ளாத போலீசார்
05-May-2025
திருவாலங்காடு:சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அருகே நாராயணபுரம் கூட்டுச் சாலை அமைந்துள்ளது. இந்த கூட்டுச்சாலை முதல் பட்டரைப்பெரும்புதுார் வரை 10க்கும் மேற்பட்ட இடங்களில், சாலையோரத்தில் கருவேல செடிகள் முளைத்துள்ளன.சாலை வரை நீண்டுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இச்செடிகளில் உள்ள முட்கள், சாலையோரமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் ஆடைகளை கிழிப்பதோடு, கண்களை பதம் பார்க்கும் நிலை உள்ளது.எனவே, இருசக்கர வாகன ஓட்டிகளை காயப்படுத்தும் வகையில், சாலையோரம் நீண்டு வளர்ந்துள்ள கருவேல செடிகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
05-May-2025