மேலும் செய்திகள்
லாரி மோதி இருவர் பலி
17-Nov-2024
மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி
21-Nov-2024
வகுப்பறையில் மயங்கிய சிறுவன் மரணம்: பெற்றோர் கதறல்
25-Nov-2024 | 1
மீஞ்சூர்,:சென்னை, கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 30; லாரி டிரைவர். சென்னை மூலக்கடையில் இருந்து, டாடா 407 லாரியில் கோழிகளை ஏற்றிக்கொண்டு, மீஞ்சூர் பகுதிக்கு வந்தார்.மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு இந்திரா நகர் அருகே செல்லும்போது, சாலையோரத்தில் இருந்த மின்மாற்றியில் லாரி மோதியது.அப்போது மின்மாற்றிக்கு செல்லும் மின் ஒயர் சுரேஷ் மீது பட்டு மின்சாரம் பாய்ந்தது. இதில், மூர்ச்சையானவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Nov-2024
21-Nov-2024
25-Nov-2024 | 1