உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தார்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அச்சம்

தார்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அச்சம்

திருத்தணி, திருத்தணி பகுதியில் கிராவல் மண், எம்.சாண்ட் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள், தார்பாய் மூடாமல் செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். திருத்தணி ஒன்றியத்தில், இரண்டு இடங்களில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து, நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக கிராவல் மண் எடுக்கப்படுகிறது. சில நாட்களாக ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் மற்றும் கிராவல் மண் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள், தார்பாய் மூடாமல் அதிவேகமாக செல்கின்றன. இந்த லாரிகளில் இருந்து பறக்கும் துாசி, பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். தார்பாய் மூடாமல் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், போக்குவரத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், இரு துறை அதிகாரிகள் திருத்தணி பகுதியில் ஆய்வு செய்து, விதிமீறும் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை