உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காசநோய் கண்டறியும் நவீன ஆய்வகம்  திறப்பு

காசநோய் கண்டறியும் நவீன ஆய்வகம்  திறப்பு

ஆவடி:திருவள்ளூர் மாவட்டத்தில், 'காசநோய் இல்லாத தமிழகம் - 2025' இலக்கை அடைவதற்கான, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி பகுதியில் காசநோய் ஒழிப்பு துரிதப்படுத்தும் வகையில், ஏ.வி.என்.எல்., 'நிக் ஷாய் மித்ரா' திட்டத்தின் கீழ், சி.எஸ்.ஆர்., நிதியின் வாயிலாக, காசநோய் கண்டுபிடிக்கும் கருவி வாங்குவதற்கு 24.43 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதி வாயிலாக, மாநிலத்தில் முதல் முறையாக திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அரசு மருத்துவமனையில் காசநோய் கண்டுபிடிக்கும் அதிநவீன கருவி கொள்முதல் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.இந்த கருவி வாயிலாக, காசநோயை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். ஆவடி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட இந்த ஆய்வகத்தை, அமைச்சர் நாசர் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கலெக்டர் பிரதாப், மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை