உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கன்னிகைப்பேரில் டூ - வீலர் திருட்டு

கன்னிகைப்பேரில் டூ - வீலர் திருட்டு

ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் அடுத்த, பூரிவாக்கம் கிராமம், செங்காளம்மன் கண்டிகை, பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சம்பத், 57; கடந்த 7ம் தேதி, கன்னிகைப்பேர் கிராமம், செல்லியம்மன் கோவில் அருகே, வசிக்கும் பூசாரி அருள் வீட்டிற்கு, 'ஆக்டிவா' பைக்கில் சென்றார்.அங்கு வீட்டின் வெளியே பைக்கை நிறுத்திவிட்டு வீட்டின் உள்ளே சென்றார். அவரிடம் பேசி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, பைக் காணாமல் போனதை கண்டார். சுற்றியுள்ள பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து சம்பத், பெரியபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்படி, போலீசார் வழக்குப் பதிந்து, காணாமல் போன பைக்கை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை