உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  போதையில் ரகளை: இருவர் கைது

 போதையில் ரகளை: இருவர் கைது

பொதட்டூர்பேட்டை: ஜன. 12--: பொதட்டூர்பேட்டை அடுத்த கொத்துார் அருந்ததி காலனியில், மது போதையில் இருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளதாக, பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், ரகளையில் ஈடுபட்ட இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், நொச்சிலியைச் சேர்ந்த ராஜதுரை, 22, அஜய், 19, என தெரிந்தது. இவர்கள், அங்குள்ள வீடுகளின் கூரை, குடிநீர் குழாய் உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தி, அப்பகுதி மக்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார், திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !