உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாட்டு வெடி வைத்திருந்த இருவர் கைது

நாட்டு வெடி வைத்திருந்த இருவர் கைது

மணவாளநகர்: கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் பகுதியில், மணவாளநகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, கோமதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், போளிவாக்கம் அடுத்த வலசைவெட்டிகாடைச் சேர்ந்த கோவிந்தராஜ், 37, சுகேந்திரன், 38, என, தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, 17 நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார், இருவரையும் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ