மது விற்ற இருவர் கைது
திருத்தணி:கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி அடுத்த காசிநாதபுரம் மற்றும் தரணிவராகபுரம் ஆகிய பகுதிகளில், சிலர் மதுபாட்டில்களை கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக, மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, எஸ்.பி., விவேகானந்த சுக்லா உத்தரவின்படி, திருத்தணி போலீசார் மேற்கண்ட இரண்டு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, வீடுகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த ஆறுமுகம், 48, சதீஷ், 36, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 180 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.