உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா கடத்தல் இருவர் கைது

குட்கா கடத்தல் இருவர் கைது

திருத்தணி:திருத்தணி வழியாக குட்கா பொருட்கள் கடத்துவதாக, திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, திருத்தணி - நாகலாபுரம் கூட்டுச்சாலையில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 118 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. விசாரணையில், ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த கருப்புசாமி, 34, ஆந்திர மாநிலம் புத்தூரைச் சேர்ந்த ஜெய்ஸ்ரீ, 27, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், குட்காவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ