உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போன் பறித்த இருவர் கைது

போன் பறித்த இருவர் கைது

சென்னை, திருமுல்லைவாயல், சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் அகஸ்டின், 18. இவரது நண்பர்களான மோஷன், முகிலன் ஆகியோருடன், நெற்குன்றம், பெருமாள் கோவில் வழியாக, கடந்த 18ம் தேதி நடந்து சென்றார்.அப்போது, அங்கு வந்த நான்கு மர்ம நபர்கள், அகஸ்டின் மற்றும் நண்பர்களை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, அவர்களின் இரு மொபைல் போன்களை பறித்து சென்றனர்.இதுகுறித்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். நெற்குன்றம் ஆனஸ்ட்ராஜ், 23, புளியந்தோப்பு ராஜ்குமார், 23, ஆகிய இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி