உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிலத்தகராறில் இருவர் கைது

நிலத்தகராறில் இருவர் கைது

திருத்தணி:நிலத்தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வழக்கில், இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர், 33. லாரி ஓட்டுநர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 32, என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று, தனசேகர் தன் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது எதிரே வந்த ராஜேஷ் வழிமறித்து தகராறு செய்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில், இருவரும் காயம் அடைந்தனர். இது குறித்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து தனசேகர், ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை