உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்னல் தாக்கி இரு மாடுகள் பலி

மின்னல் தாக்கி இரு மாடுகள் பலி

திருவாலங்காடு:ஆற்காடு குப்பத்தில் மின்னல் தாக்கி இரண்டு மாடுகள் உயிரிழந்தன. திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 50; விவசாயி. இவர் தன் விவசாய நிலத்தில் பசு மற்றும் காளை மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாலை ஒரு பசு மற்றும் ஒரு காளை என, இரண்டு மாடுகளுக்கு தீவனம் வழங்கி விட்டு, வயல்வெளியில் கட்டிவிட்டு சென்றார். மாலை இடியுடன் கூடிய மழை பெய்தபோது மின்னல் தாக்கி இரண்டு மாடுகளும் உயிரிழந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை