உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிலக்கரி லாரி மோதி மேலுாரில் இருவர் பலி

நிலக்கரி லாரி மோதி மேலுாரில் இருவர் பலி

மீஞ்சூர்: மீஞ்சூர் அருகே, நிலக்கரி கொண்டு சென்ற லாரி மோதியதில், பைக்கில் சென்ற இருவர் உடல் நசுங்கி பலியாகினர். மீஞ்சூர் அடுத்த மேலுார் கிராமத்தை சேர்ந்தவர்கள் மதன், 41, தனசேகர், 53. லாரி ஓட்டுநர்கள். இன்று (நவ.,11) இரவு, இருவரும் மீஞ்சூர் பஜார் பகுதிக்கு செல்வதற்காக, பைக்கில் வல்லுார் – மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். மேலுார் சாலை சந்திப்பு அருகே செல்லும்போது, அதே மார்க்கத்தில் அத்திப்பட்டு புதுநகரில் இருந்து, கும்மிடிப்பூண்டிக்கு நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி, பைக் மீது மோதியது. இதில் மதன், தனசேகர் ஆகியோர் நிலைதடுமாறி, கீழே விழுந்து, அதே லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியாகினர். தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ