உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி, நடுத்தெருவைச் சேர்ந்தவர் தேசப்பன் மகன் ஷ்யாம்குமார், 20; அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.இவர், நேற்று காலை பணிக்கு சென்று விட்டு, இரவு 8:00 மணியளவில், 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருவாலங்காடு ---- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில், சின்னம்மாபேட்டை அடுத்துள்ள புலவநல்லூர் ஏரி அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையில் நடந்து சென்ற சக்கரமநல்லூர் கிராமத்தில் கரும்பு வெட்டும் பணிக்கு வந்த, கடலூர் மாவட்டம், எஸ்.கே.,புரத்தைச் சேர்ந்த குமார், 47, என்பவர் மீது மோதியது.இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஷ்யாம்குமார் மற்றும் குமார் இருவரும் உயிரிழந்தனர். திருவாலங்காடு போலீசார் இருவரின் சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ