உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செயின் பறித்து தப்ப முயன்ற வடமாநிலத்தவர் இருவர் கைது

செயின் பறித்து தப்ப முயன்ற வடமாநிலத்தவர் இருவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணிடம் செயினை பறித்து தப்ப முயன்ற இரு வடமாநில வாலிபர்களை, அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து, தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே வீராச்சாமி நகரைச் சேர்ந்தவர் ரகுபதி மனைவி சத்யா, 33. நேற்று மாலை வீட்டில் இருந்து துராபள்ளம் பஜார் நோக்கி நடந்து சென்றார். தொம்பரை ஆண்டவர் கோவில் அருகே, இரு வடமாநில வாலிபர்கள், சத்யா அணிந்திருந்த 1.5 சவரன் செயினை பறித்துவிட்டு தப்ப முயன்றனர். சத்யா கூச்சலிட்டதால், அங்கிருந்த மக்கள் இருவரையும் சுற்றி வளைத்து, தர்ம அடி கொடுத்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அபுஜார், 18, காசிம், 19, என்பது தெரியவந்தது. இருவரும், அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே உள்ள கோழிக்கடையில் பணிபுரிந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை