உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கடம்பத்துாரில் கனரக லாரி மோதி பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

கடம்பத்துாரில் கனரக லாரி மோதி பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார், திருமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா, 21. இவரது 2 வயது பெண் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, நேற்று முன்தினம் உறவினர் பகவதி, 22, என்பவருடன், சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.சிகிச்சை முடிந்து, பகவதியின், 'ஹீரோ ஸ்பிளெண்டர்' பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருப்பந்தியூர், 'காஸ்' நிறுவனம் அருகே சாலை வளைவில் திரும்பும்போது, எதிரே வேகமாக வந்த 'அசோக் லேலண்ட்' கனரக லாரி மோதியதில் ஐஸ்வர்யா உயிரிழந்தார்.பகவதியும், 2 வயது குழந்தையும் சிறு காயங்களுடன் தப்பினர். மேலும், எதிரே வந்த டி.வி.எஸ்., ஸ்கூட்டி மீதும் லாரி மோதியது. இதில், திருப்பந்தியூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், 70, என்பவர் உயிரிழந்தார். உடன் வந்த பார்த்திபன், 37, அதிர்ஷ்டவசமாக தப்பினார்.அங்கிருந்தோர் காயமடைந்தவர்களை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த மப்பேடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்தி தப்பயோடிய லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி