மேலும் செய்திகள்
ரூ.5.5 கோடி ஹவாலா பணம் ஆம்னி பஸ்சில் பறிமுதல்
10-Sep-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் சுங்கச்சாவடி பகுதியில், 271 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். திருவள்ளூர் வழியாக குட்கா கடத்தப்படுவதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருவள்ளூர் தாலுகா போலீசார், பட்டரைபெரும்புதுார் சுங்கச்சாவடியில், நேற்று மாலை வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருத்தணியிலிருந்து திருவள்ளூர் நோக்கி வந்த 'ஹூண்டாய் எக்ஸ்ன்ட்' காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 18,364 குட்கா பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு 1.15 லட்சம் ரூபாய். கார் மற்றும் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த தாலுகா போலீசார், சென்னை குன்றத்துாரைச் சேர்ந்த சங்கரநாராயணன், 40, மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சதீஷ், 35, இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
10-Sep-2025