உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கத்தி காட்டிய மிரட்டிய இரண்டு ரவுடி கைது

கத்தி காட்டிய மிரட்டிய இரண்டு ரவுடி கைது

திருத்தணி:திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், இரண்டு வாலிபர்கள் பட்டா கத்திகள் வைத்துக் கொண்டு, பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் மற்றும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை மிரட்டி வந்தனர்.தகவல் அறிந்ததும் திருத்தணி எஸ்.ஐ., குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வாலிபர்களிடம் இருந்த இரண்டு பட்டா கத்திகளை பறிமுதல் செய்தனர்.மேலும், அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், திருத்தணி நகரைச் சேர்ந்த சரவணன், 34, சந்துரு, 25, என, தெரிய வந்தது.சரவணன் மீது, திருத்தணி போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி என, 5 வழக்குகள் உள்ளன. அதே போல, சந்துரு மீது, திருத்தணி மற்றும் கவரப்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில், கொலை முயற்சி, வழிப்பறி உட்பட 10 வழக்குகள் பதிவாகி இருந்தது தெரிந்தது.அதை தொடர்ந்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து மேற்கண்ட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !