டூ - வீலர் திருட்டு
திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம் ஊராட்சி புதுகாலனியைச் சேர்ந்தவர் அஜித்குமார், 24; கட்டட தொழிலாளி.கடந்த வாரம் கனகம்மாசத்திரம் அடுத்த ஆற்காடுகுப்பத்தில் தனியார் பள்ளியில் நடக்கும் கட்டட பணிக்கு, 'ஹூரோ ஹோண்டா ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில் சென்றார்.ஹனுமந்தா சுவாமி கோவில் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு பணி செய்து கொண்டிருந்தார். மாலை 6:00 மணியளவில் பணி முடிந்து வந்து பார்த்தபோது, வாகனம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து அஜித்குமார் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.