உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி சர்க்கரை ஆலை வளாகத்தில் பயன்பாடின்றி குடியிருப்புகள்

திருத்தணி சர்க்கரை ஆலை வளாகத்தில் பயன்பாடின்றி குடியிருப்புகள்

திருவாலங்காடு:திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு உட்பட்டு, அரக்கோணம், பள்ளிப்பட்டு, திருத்தணி உட்பட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து, கரும்பு வரவழைக்கப்பட்டு அரவை செய்யப்படுகின்றன.இந்த ஆலையில் நிரந்தர பணியாளர், தினக்கூலி தொழிலாளர் என 1,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இங்கு நிரந்தர தொழிலாளர்களாக உள்ள நிர்வாக அதிகாரிகள், இன்ஜினியர், ஊழியர்களின் நலன்கருதி ஆலை வளாகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.பின், குடியிருப்பு கட்டடங்கள் பராமரிக்காமல் விடப்பட்டதால், தற்போது பயன்பாடின்றி பல கட்டடங்கள் சிதிலம் அடைந்தும், செடி, கொடிகளுக்கும் மறைந்தும் உள்ளது. இதனால் கட்டடம் பயனற்று போகும் நிலையில் உள்ளது.எனவே, ஆலை வளாகத்தில் உள்ள குடியிருப்புகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர, ஆலை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் கூறியதாவது:கட்டடங்களை பராமரிப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். உரிய முறையில் பராமரித்து இருந்திருந்தால் கட்டடங்கள் பயன்படுத்தும் அளவு இருந்திருக்கும். குடியிருப்புகள் இல்லாததால் ஆலையில் பணிபுரிவோர் வெளியில் அதிக பணம் கொடுத்து வாடகை கட்டடத்தில் உள்ளனர். ஊழியர்களின் நலன்கருதி குடியிருப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்க்கரை துறை ஆணையருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ