உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நரசிம்மபேட்டை கூட்டு சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

நரசிம்மபேட்டை கூட்டு சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

பள்ளிப்பட்டு:ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் நெடுஞ்சாலை, 20 கி.மீ., உள்ளது. இதில், ராஜாநகரம் ஏரிக்கரை, நரசிம்மபேட்டை கூட்டு சாலை, நாதன்குளம், அத்திமாஞ்சேரிபேட்டை பஜார் பகுதி, கர்லம்பாக்கம் சாலை திருப்பம், பொதட்டூர்பேட்டை கூட்டு சாலை, குமாரராஜபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. நாதன்குளம் பகுதியில் கடந்த ஆண்டு இரண்டு வேகத்டைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன. இதே சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு முன்பாகவும் வேகத்டை மற்றும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தனியார் பால் பண்ணை எதிரேயும் வேகத்டை ஏற்படுத்தப்பட்டது.ஆனால், அடிக்கடி விபத்து நேரிட்டு வரும் நரசிம்மபேட்டை கூட்டு சாலையில் இதுவரை எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.கடந்த 10 நாட்களுக்கு முன் இந்த கூட்டு சாலையில் தனியார் பேருந்து மோதியதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கடந்த ஓராண்டு கலாமாக இந்த மார்க்கமாக தினசரி நுாற்றுக்கணக்கான டாரஸ் லாரிகள், பள்ளிப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் குவாரிகளுக்கு வந்து செல்கிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஷேர் ஆட்டோ ஒன்று, சாலையில் இருந்து விலகி, வயலில் புகுந்தது. நரசிம்மபேட்டை மற்றும் ராஜாநகரம் ஏரிக்கரையின் வடக்கு பகுதியில் வேகத்தடைகள் ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ