உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குப்பை கொட்டுவதால் மாசடையும் வீரமங்கலம் ஓடை

குப்பை கொட்டுவதால் மாசடையும் வீரமங்கலம் ஓடை

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வீரமங்கலம் கிராமத்தின் தென்மேற்கில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு, ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள காடுகளில் இருந்து நீர்வரத்து உள்ளது. அய்யன்கண்டிகை ஓடை வாயிலாக வீரமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இந்நிலையில், இந்த ஓடைக்கரையில், மரிகுப்பத்தில் இருந்து வீரமங்கலம் செல்லும் சாலையை ஒட்டி பகுதிவாசிகள் சிலர் குப்பையை கொட்டி எரித்து வந்தனர். சமூகஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது சாலையோரம் கொட்டுவதை கைவிட்டு, ஓடையின் நடுவே மனித நடமாட்டம் இல்லாத பகுதியில் குப்பையை கொட்டி வருகின்றனர். குப்பை கொட்டும் நபர்களை கண்டறிந்து தடுக்க நீர்வளத்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ