சாலையை சீரமைக்க வீரராகவபுரத்தினர் மனு
திருவள்ளூர் : வீரராகவரபுரம் 4வது வார்டில் சாலை சீரமைக்க கோரி, கிராமத்தினர், கலெக்டரிடம் மனு அளித்தனர்.திருவள்ளூர் ஒன்றியம், ஈக்காடு அடுத்த வீரராகவபுரம் கிராமத்தினர் சாலை சீரமைக்கக்கோரி, 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். கூட்டமாக வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின், ஐந்து பேரை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனர்.கிராமத்தினர் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:திருவள்ளூர் ஒன்றியம், வீரராகவபுரம் ஊராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட விநாயகர் கோவில் தெரு முதல், அம்மன் கோவில் வரை சாலை சேதமடைந்துள்ளது. இதனால், பகுதிவாசிகள் சாலையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.இச்சாலையை சீரமைக்க, ஒன்றிய நிர்வாகம் அனுமதி வழங்கியும் இதுவரை சிமென்ட் சாலை அமைக்கப்படவில்லை.எனவே, இச்சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.