உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செட்டிபேடில் பஞ்சரான நெடுஞ்சாலை நெரிசலில் சிக்கி வாகனங்கள் தவிப்பு

செட்டிபேடில் பஞ்சரான நெடுஞ்சாலை நெரிசலில் சிக்கி வாகனங்கள் தவிப்பு

திருமழிசை. செட்டிபேடு பகுதியில், சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை சேதமடைந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள் நெரிசலில் சிக்கி கடும் அவதிப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், செட்டிபேடு கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையிலிருந்து செட்டிபேடு, உட்கோட்டை வழியாக, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் நேமம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையிலிருந்து நேமம் செல்லும் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில், சாலை சேதமடைந்து, மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால், சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சேதமடைந்து, படுமோசமான நிலையில் உள்ள நெடுஞ்சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி