பராமரிப்பி இல்லாத வெங்கடாபுரம் வரத்து கால்வாய்
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வெங்கடாபுரம் கிராமம், வேலுார் மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. வேலுார் மாவட்டம், பொன்னை ஆற்றின் நீர்வளத்தால் சோளிங்கர் ஏரிக்கு நீர்வரத்து உள்ளது.பொன்னை ஆற்றின் உபவடிகால் வழியாக, திருவள்ளூர் மாவட்டம், வெங்கடாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் நீர்வரத்து உள்ளது. இதனால் வெங்கடாபுரம், தாமரைகுளம் உள்ளிட்ட பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சிறப்பாக இருந்து வருகிறது.இந்நிலையில், வெங்கடாபுரம் கிராமத்தின் தென்மேற்கில் இருந்து தென்கிழக்கில் பாய்ந்து செல்லும் நீர்வரத்து கால்வாய், உரிய பராமரிப்பு இன்றி உள்ளது.இதனால், வெங்கடாபுரத்திற்கு கிழக்கில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.