உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கிராம உதவியாளர் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு

 கிராம உதவியாளர் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு

திருவள்ளூர்: கிராம நிர்வாக உதவியாளர் தேர்வு, நிர்வாக காரணங்களுக்காக தற் காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில், மூன்று ஆண்டுக்கு மேல், 151 கிராம உதவி யாளர் பணியிடம் காலியாக உள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப, மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரருக்கு எழுத்து தேர்வு, வரும் 29ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, தற்காலிகமாக எழுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ