கிராம செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்:திருவள்ளூர் டோல்கேட் அருகே கிராம செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் சந்திப்பில் நேற்று, கிராம பகுதி சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாநில துணை தலைவர் கற்பகம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், காலி பணியிடம் நிரப்ப வேண்டும்.கூடுதல் துணை மைய பொறுப்பு பணிக்கு நிர்ப்பந்திக்க கூடாது. பணிச்சுமை, மன அழுத்தம் கொடுப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.