உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சவுடு மண் லாரிகளால் கிராம சாலை பஞ்சர்

சவுடு மண் லாரிகளால் கிராம சாலை பஞ்சர்

கீழ்மணம்பேடு:கீழ்மணம்பேடு பகுதியில் சவுடு மண் லாரிகளால் சேதமடைந்த கிராம சாலையால், பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். திருமழிசை அருகே கீழ்மணம்பேடு ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள திருமழிசை ஏரியில் இருந்து, 2023 செப்டம்பர் மாதம் அரசு அனுமதியுடன் சவுடு மண் அள்ளும் பணி நடந்து வந்தது.இவ்வாறு ஏரியில் சவுடு மண் அள்ளப்பட்ட லாரிகள், கீழ்மணம்பேடு குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாலை வழியே சென்று வந்தன.இந்த லாரிகளால் சாலைகள் மிகவும் சேதமடைந்து, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளன. இதனால், இச்சாலை வழியே பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கிராம சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கீழ்மணம்பேடு பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ